சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
முகவரி தந்திடும் புத்தாண்டு!
அவனியில் அவலம் அகன்றிட மெல்லத்
தவழ்ந்து நீவா தரணியும் மகிழ
செகமதில் மக்கள் செந்தமிழ் செதுக்கி
அகத்தினில் உண்மை அன்பைப் பெருக்கி
யுகங்கள் கடந்து ஜெயமும் கண்டு
முகவரி தரித்து முத்தமிழ் வாழப்
புத்துணர் வுடனே புதுமை படைக்க
இத்தரை மீது இன்பம் பொங்க
கலைநயம் கொண்டு கன்னிநீ வருவாய்
நிலையாய் என்றும் நித்திலம் மகிழவே!
ப.வை அண்ணா! உங்கள் சுட்டிக்காட்டலுக்கும் தட்டிக்கொடுப்புக்கும் மிக்க நன்றி !
திரு.நடா மோகன் அவர்களே! உங்களுக்கும் மிகுந்த நன்றி!
நன்றி வணக்கம்!