சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிஙங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பாமுகப்பூக்கள்!
தமிழ் பேசும் நல்லுலகில்
சிமிழ் கொண்டு விளக்காகி
ஒளிவீசும் அரிய ஊடகம்
சிறியோர் பெரியார் பேதம் இல்லை
நெறிமுறை தவறு ஏதும் இல்லை
பாமுகம் என்றதோர் ஊடகம்
பாவலர் நிறைந்த அந்தத் தடாகம்
ஆர்வலர் ஈர் பத்துப்பேரும்
பாமுகப்பூக்களாய் நறுமணம் வீச
பாடுபட்டு உழைத்த ப.வை.அண்ணா
விதைத்த நல் விதையே
சந்தம் சிந்திய சந்திப்பு
சொந்தக்கவிபடைத்து
முந்திக்கொண்ட இருபது
கவிப்பூக்களை அறுவடை செய்தார்
அச்சில் ஏற்றி அழகு பார்த்தார்
அரிய நூல் வெளியீடு
பெறுமதி மிக்க பாரிய பணி!
பெரும்பேறு பெற்றோம்
பாமுகப்பூக்கள் நாம்!
நன்றி வணக்கம்!
அழகாய் சிறப்புற நடந்து முடிந்த பனுவல் வெளியீடு. முன்னின்று உழைத்து முழு வெற்றி கண்டீர்கள்.
தன்னலம் கருதா தரமுயர்ந்த சேவை
மனப்பான்மை, இல்லாளின் இன்முக ஒத்துழைப்பு, பதிப்பகத்ததாரின் பற்று, விழாவில் வாழ்த்துரை , ஆசியுரை, ஆய்வுரை அத்தனையும் சிறப்பு. அனைவருக்கும் கோடானகோடி நன்றி! பாமுகத்தின் தொடர்பணிக்கும் மிக்க மிக்க நன்றி !