சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிரினிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வரவேற்போம்
*****************
புத்தாண்டு
*************
துன்பங்கள் நீக்கிட துரோகங்கள் ஒழிந்திட
வன்மங்கள் தொலைந்திட
வறுமையும் விலகிட
இன்பங்கள் பெருகிட
இருளும் அகன்றிட
நன்மையைப் பயக்கும்
நல்லாண்டாய் வா!
2023 காலம் கடந்து சென்றது
அஞ்சும் உலகம் அறிவில் தெளிந்து
வஞ்சம் இல்லாத வரமும் கொண்டு
எஞ்சும் வாழ்வில் ஏற்றம் கண்டு
பஞ்சம் இல்லாத பாரினில் மக்களுக்கு
கொஞ்சம் நிம்மதி கொண்டுவா 2024!

நன்றி!