சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

பாமூகம் வாழியவே ! எம்
பாக் கடல் நீயானாய்
பாச்சர மாலை கொண்டு
பாத் தமிழ் வாழ்த்துதுமே !

அகவைகள் பன்னினிரண்டில்
அரும்பிடும் குறிஞ்சியைப் போல்
வாரத்திற்கொர் முறை மலரும்
வாடிக்கை மலரெம் பாமுகமே !

ததும்பிடும் தமிழ் கொண்டு
தம்முணர்வினை வரிகளாக்கி
தமிழ்கவிதைகள் புனைந்திடும்
தமிழ்க் கவிஞரின் விளைநிலம் நீ !

துளிர்த்திடும் இளம் கவிஞர்
துள்ளி விளையாடிட ஓர் முற்றம்
துணிச்சலாய் வழங்கிய பாமுகம்
துடிப்புடை மனங்களின் தாய்மடி

அகவைகள் ஒவ்வொன்றாய் கடந்து
அடைந்தது இருபத்தோடு ஓரேழு
அதனுள் மலர்ந்தவ்ர் கவிஞர்களாய்
அன்னைத் தமிழின் செல்வங்களாய்

தளமொன்று அமைத்தவர் எம்
தம்பி நடா மோகனோடு அவர்தம்
தாரமாம்.நல்நங்கை வாணியும்
தமிழுக்குக் கிடைத்த அருஞ்செல்வர்

எதுவந்த போதிலும் அதனை
எதிர்கொண்டு வெற்றியோடு
எந்நாளும் நடைபோடும் பாவையர்
எதுகைமோனை சந்தமிகு ஜெயபாலன்

நிகழ்வொன்று வெற்றியாய் நடந்திட
நிச்சயம் வேண்டும் பங்களிப்போர்
நினைத்திட முடியா ஆதரவு நல்கும்
நலமுடை நெஞ்சமுறு சோதரசோதரியர்

இணையற்ற இந்தப் பாமுகத்தின்
இருபத்தியேழாம் ஆண்டு விழாவை
இதயம் நிறைந்த வாஞ்சையுடன்
இனிய வாழ்த்துக்கூறி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்