சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

பெண்ணே நீயொளிரும் விளக்கு
உந்தன் பெருமையினை விளக்கு
நிந்தன் இடர்களெல்லாம் விலக்கு
முந்துமுன் திறமைகளை துலக்கு

பெண்ணே சரித்திரம் படைப்பாய்
மூடர்தம் சாத்திரம் உடைப்பாய்
ஊழ்வினை என்பதைத் தகர்ப்பாய்
வாழ்வினில் இலக்கினை ஜெயிப்பாய்

பெண்ணே நீயொரு ஆன்மா
கண்டதும் மாண்புடை ஜென்மா
தாய்மையைப் போலவே வருமா ?
அன்பினை உனைப்போல் தருமா ?

பெண்ணே விலங்கினை உடைத்து
மண்ணில் பெருமைபல படைத்து
விண்ணில் கொடியினை உயர்த்து
உலகினை உறுதியினால் ஜெயித்து

பெண்ணே பேதைகளென்பதை மாற்று
மனிதத்துவ மாண்புகளை சாற்று
பாரெங்கும் நீதிவிளக்கினை ஏற்று
பாவையரும்மை அடிமைசெய்தது நேற்று

பெண்ணே தாய்மையின் வடிவமாய்
பெருமை தன்னகத்தினில் மொத்தமாய்
பொறுமையில் பூமியின் சின்னமாய்
என்றுமே வென்றிடுவாய் காலம்காலமாய்

சக்தி சக்திதாசன்