சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 254
விருப்பு தலைப்பு

எழுதாத கவிதை ஒன்று
எதற்காக எழுந்தது இன்று
ஏதேதோ ராகம் கொண்டு
இசைக்கின்ற கீதம் கண்டு

துடிக்கின்ற இதயம் இரண்டு
வடிக்கின்ற சோகம் சீண்டும்
முடிக்கின்ற வாழ்வில் என்றும்
சிரிக்கின்ற காலம் கெஞ்சும்

புதிதான ஞானம் இல்லை
புரிதலே அவ் வறிவின் எல்லை
அழகாக மலரும் முல்லை
அதற்காக வண்டின் தொல்லை

பேசாத வார்த்தை எல்லாம்
எழுத்தாகக வடியும் வெள்ளம்
எதற்காக வாடிடும் உள்ளம்
அன்பங்கு தேடிடும் பள்ளம்

நேற்றோடு மறைந்தது எண்ணம்
காற்றாக மறைந்தது உருவம்
நீறாகத் தகித்திடும் உணர்வு
வேறாகப் பிரிந்திடும் இதயம்

சொல்லி வருவது இல்லை
சொல்லியும் புருவது இல்லை
சொல்லாமல் தெரிவது இல்லை
சொற்களில் மறைவதும் இல்லை

புரிந்திடும் உள்ளம் ஒன்று
புகுந்திடும் அதனுள் எண்ணம்
வித்திடும் நினைவுகள் எல்லாம்
விலகிடும் கனவுகள் கேளாய்

 
சக்தி சக்திதாசன்