சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

வசந்தத்தில் ஓர் நாள்
“சந்தம் சிந்தும் சந்திப்பு”

கண்களை மூடிகொண்டே
பயணங்கள் பாதிவரை
விழித்தபோது
வசந்தங்கள் விரைவாய்
மறைந்து விட்டன

தீக்குள் விரலை
வைத்து கைகளைச்
சுட்டுக் கொண்டு
விதியின விளையாட்டுத்தான்
இது என ஓர்வாதம்

குளிர்காலத்தில்
நிர்வாணமாயும்
கொதிக்கும் வெய்யிலில்
ஜந்து சுற்று ஆடைகளுடனும்
வலம் வரும்
வியப்பான விவேகங்கள்

காவியம் இது எனக்
காதல் பேசிப் பின்
கல்யாணமானதும்
விவாகத்தை ரத்துச்
செய்யவென
நீதிமன்றம் ஏகும்
நியாயங்கள்

ஏழையின் உலகில்
ஏற்றமுண்டாக்க
மாற்றத்தை விரும்பா
பொதுநலவாதிகள்

பெண்களை காட்சிப்
பொருட்களாக்கி
பொன்னும் மணியும்
அவர்க்குப் பூட்டி
தன்வழி சிந்திக்கும்
உரிமைதராது மறுத்து
எமதுலகம் ஏன் இன்னும்
எழிலான பாதையில்
அடியெடுக்கவில்லை
என புரியாமல் குழம்பும்
ஆட்டு மந்தைக் கூட்டம்

சுழலுது இந்தப் பூமி
துங்குதெங்கள் சாமி
உண்மை மனிதனைக் காமி
உள்ளம் சிரித்திடும் அத்தேதி

சக்தி சக்திதாசன்