சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு

“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு

சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்

முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்

எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !

கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது

சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்

மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது

தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !

மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை

கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை

கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !

சக்தி சக்திதாசன்