எத்தனைவகைகள் திமிரினில்
அத்தனைவகையும் பாரினில்
விளைந்திடும் சிலரது மனதினில்
வியத்தகுவகை எழும் திமிரது
பணக்கார வகையொரு திமிர்
பயந்திடாமல் வாழ்வினிலே நிமிர்
தவறெல்லாம் வாழ்வினில் தவிர்
தனித்தன்மை கொண்டிங்கு உயர்
அதிகார வர்க்கத்தின் திமிர்
அடக்கியாளத் துடித்திடும் அவர்
உடைத்தெறிந்திட நீயிங்கு தயார்
உண்மையோடு வாழ்வதுந்தன் உயிர்
வல்லவர்கள் கொண்டவொரு திமிர்
வன்முறைகள் கொண்டிடுவார் இவர்
நீக்கிடுவாய் வாழ்வினிலே துயர்
நிறைந்திடும் சரித்திரத்தில் பெயர்
திமிரோடு நடந்திடுவார் உறவினை
தவிர்த்திடுவதே நல்லவர் பாதை
திமிரென்றும் கொடுப்பதோ தோல்வி
திளைத்தெழுந்து பெற்றிடுவாய் வெற்றி