சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

காணிநிலம் தேடித்தேடி
நாணிடும் வகையிலெம்
பேணிடும் அமைதியை
வீணடிக்கும் மாந்தர்

உதிக்கின்ற வேளையும்
உதிர்கின்ற வேளையும்
உணரமுடியா திருந்தும்
உண்மையை மறந்தனர்

இருக்கின்ற செல்வம்
இரந்துண்டு வாழ்வதை
இதயத்தில் கொண்டிவர்
இயங்கிட மறந்திட்டாரே !

போதுமெனும் மனது
போதாது என்றேயிவர்
பொதுவுடை காணிநிலமும்
பெற்றிட ஆவலிலுளைவர்

நீர்க்குமிழியெம் வாழ்க்கை
நிம்மதி ஒன்றையேதேடி
நீக்குவோம் பேராசையை
நாடுவோம் நல்வழிகளை

சக்தி சக்திதாசன்