சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

உள்ளத்தினுள்ளே அடிக்கும் உணர்வ்லைகள் அவை
உன்னுடைய பெயரைத்தானே
உரசிச் செல்கின்றன

நெஞ்சத்துள்ளே கேட்கும்
மெல்லிய சத்தம்
நீங்காமல் உச்சரிப்பது
உந்தன் நாமத்தை

காதலது கேட்காமல்
நுழைந்து விடுகிறது
கனலாக இதயத்தை
கண நேரத்தில்
போசுக்கி விடுகிறது

இமை மூடித் திறப்பதற்குள்
விழி வழியே எப்படி
இதயத்தில் நுழைந்து
தனை இருத்திக் கொள்கிறது ?

இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பின் ஓசையும்
இனியவள் உந்தன்
வதனத்தை காட்டி மறைக்கிறது

கனவுகள் என்னும் என்
உலகினில் எப்படியோ
கள்ளமாய் நுழைந்து
நீ உலவுகிறாய்

காதல் பெரும் அலையாய்
ஆர்பரித்து எழுந்து
கரையினில் வெண் நுரையாய்
மடிந்து போயிற்று

என் இதயம் என்னும்
மைதானத்தில் ஓர்
காதல் விளையாட்டு
அங்கே என் தோல்வி
உனை ஜெயிக்கப்
பண்ணி விட்டது

சக்தி சக்திதாசன்