சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

கல்லல்ல இதயம்
சொல் கொண்டு தாக்க‌
மெல் எனும் உணர்வு
சுள் என்றே வலித்தது

நல் எண்ணம் கொண்டு
வல் கின்ற வினைகள் ஏனோ
முள் என்றே நெஞ்சில்
உள் கொண்டு தைக்க‌

பொல் லாத உலகில்
இல் லாமல் போனால்
நில் லாமல் ஓடும் வாழ்வு
சொல் லாமல் சொல்லும்

நான் ஒன்று நினைத்தால்
தான் ஒன்று நினைக்கும்
மேல் நிற்கும் ஒருவன்
ஊழ் கொண்டு விளையாட்டு

எது வந்த போதும் ஏற்றிடும்
மெது வான உள்ளம் தான்
பொது வாக யாவும் எனை
அது வாகத் தாக்கும் வேளை

சக்தி சக்திதாசன்