சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

விடைகளைத் தேடி ஓடும்
வினாக்களின் பயணமிது
முடிவுகளின் மீது நடமிடும்
முடியாத புதிய கீதமிது

எமக்கென்று இங்கே கொடுத்த
எதுவுமில்லை எனும் உண்மை
புரிகின்ற் பொழுதொன்று புலர்ந்திடும்
புதிதான சித்தாந்தம் பூத்திடும் பொழுது

சரியென்று நினத்து நடக்கையில் அது
சரிந்திடும் வேளைகள் புலர்த்திடும்
பொதுவான கருத்துக்கள் மிதந்திடும்
பொன்னான வேளையொன்றின் வேலை

தேடித்தேடி அனைவரும் ஓடியோடி
தேடல்களிந் வழி வகுத்தபாதை
மூடியமுட்களின் மீதெனிலும் ஏனோ
முடியாத ஏக்கங்களின் ஓலங்கள்

போகட்டும் என்றே ஒதுக்கிட்ட போதும்
போதாது, போதாது என்றே போராட்டம்
போயும் , போயும் மானிடராய் நாமும்
பிறந்திட்ட வேளைதனின் கோலம் தானோ?

சக்தி சக்திதாசன்