கண்களை மூடிக் கொஞ்சம்
கனவுலகில் மிதந்து வர
நெஞ்சிலொரு ஆசையடி
நினைவுகளின் ஓசையடி
நேற்றைகளை மறந்து
நாளைகளைத் துறந்து
இன்றைகளில் மகிழ
ஏங்குதடி இதயம்
எண்ணங்களின் சுமைகள்
பஞ்சாகிப் பறந்து விட
எஞ்சியுள்ள நினைவுகள்
தேனாகி இனித்துவிட
உருளுகின்ற உலகத்தில்
புரளுகின்ற நிகழ்வுகள்
துணையாக வேண்டுமென
கெஞ்சுதடி என் மனமே
வண்ணங்களின் துணையோடு
வானவில்லின் மீதேறி
வளைவான வழியூடு
விரைந்துவிட என்நெஞ்சம்
வீறு கொண்டு எழுகிறதே
சக்தி சக்திதாசன்