தேடித் தேடி தாவுகிறேன்
தேன்தமிழை நாடி ஓடுகிறேன்
வாடிவாடிக் காய்கிறேன் கவிதை
வடிக்க முடியா வேளைகளில்
மூடிமூடி வைத்திருந்த எந்தன்
முத்தமிழ் மோக உணர்வுகளை
சூடிச்சூடி மகிழ்கிறேன் தாளில்
சுந்தரத் தமிழ் மாலைகளாய்
கோடிகோடி பொன் தந்தாலும்
கொள்ளுமோ எந்தன் தாய்மொழியை
கூடிக்கூடிக் களித்திடுவேன் காணும்
கவிஞர்கள் குழுவின் மத்தியில்
பாடிப்பாடி வைத்திடுவேன் வாழ்வில்
பைந்தமிழ் மொழியின் பெருமைகளை
ஆடிஆடிக் களித்திடும் தமிழ்க்கலைகளை
ஆனந்தமாய் போற்றிக் களித்திடுவேன்
ஓடிஓடி அறிந்திடுவேன் தமிழன்னையின்
ஒப்பற்ற தன்மைகளை வாழும்வரை
ஓங்கிச் சொல்வேன் தமிழனென்று
ஒப்பில்லா மொழி தமிழ்மொழியென்றே