வியாழன் கவிதை

க.குமரன்16.2.23

வியாழன் கவி
ஆக்கம் 101

மண் வாசனை

புழுதி வாரி எழும்
மண் வாசம்
எந்த ஊர்
புழுதி வாசம் சொல்லு

செம்பாட்டு புழுதி
வாசம் என்று சொல்லு

கால் புதையும்
சேறு
தண்ணீர் குழைந்து
நிற்கும் ஊரு !

செம்பாட்டு மண்
என்று சொல்லுகிறேன்
கேளு !

வாழைக்கு பெயர்போன
வயிராற உண்ண
வைக்கும். ஊர். எது?

வயிராற உண்ண
வைக்கும் ஊர்
வஞ்சகம் செய்யாது
உழைக்கும் ஊரு
நம் நீர்வேலி என்று
கூறு !!

க.குமரன்
யேர்மனி