சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

மாசி
மாசி
சும்மா ஓசி
நீ. யோசி
பின்பு யாசி

மாசி மகம்
தென் காசி
சிவனை போற்றி
மனதில் ஏற்றி

தச்சன் மகள்
தாச்சாயினி உதயம்
உதய பௌனமியில்
உன்னத அவதாரம்

மக தரிசனம்
பெண்ணுக்கு
திருமணம் நடக்கும்
மாங்கல்யம் நிலைக்கும்!

சுவாமி மலையில்
தந்தைக்கு மகன்
உபதேசம் செய்த
நாளாமே!

காம தகன விழா!
மன்மதன் மறைந்து
உதித்த நாளாமே

ரதிதேவிக்கு மடிபிச்சை
தந்தாராமே சிவன் !!….

க.குமரன்
யேர்மனி