சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 9.5.23

சந்தம் சிந்தும்
வாரம்-221

காணி

ஆறு அடியோ
நாலு அடியோ
எனது என்பதில்
எத்தனை திளைப்பு!

மண் என்றோ
பொன் என்றோ
பெண் என்றோ
மயங்காதோர் யார்?

வேலிகள் நடந்திடும்
வேண்டும்வரை நகர்ந்திடும்
ஆனவரை எனதாக
ஆசையும் வளர்ந்திடும்

வான் பயிரும் பங்காகும்
வாய்த்த கிணறும் பங்காகும்
வாய்கால் வழியும் பங்காகும்
வழி தரவும் வழக்காடும்.

இரவலும் பங்கும்
இனித்திடாத உறவுகள்
வகுத்தவும் பிரித்தலும்
வலுவாகும். உறவுகள

க.குமரன்
யேர்மனி