சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 245

காதல்

அன்ன நடை
ஜெசிந்தா
பின்னல் அழகி
ஜெனிட்டா
பேச்சழகி
ஸ்டெல்லா
பொட்டழகி
சந்திரிக்கா!

என்ன நடை
உந்தன் நடை
இயல்பாக வந்த நடையோ?
சின்ன யிடை
இன்று சொன்ன பேச்சு
கேட்டிடுமா ஜெசிந்தா ?

குதிரை வால் கூந்தலடி
மல்லிகை பூ
முளங்கள் வைத்து
நறுமணம் பரப்பினாய்
காற்றினிலே
கூந்தல் இன்று
சொந்தமா ஜெனிட்டா?

அப்பு ராசா
என்று தொட்டு பேசுவாயே!
இன்று
பல்லு இருக்கா?
சொல்லு இருக்கா
ஸ்டெல்லா !

சிவப்பு குஷ்பு
கருத்த பொட்டு
கண்ணு படும் என்று
காளி போல
நீ வைப்பாயே!

சிவப்பு பொட்டு
வைத்து
சீரஞ்சிவீயாக
வாழ்கிறாயா?
சந்திரிக்கா!

இப்ப ஆச்சிகளாக ..
கண்டால் வர
சொல்லுங்க!
ஐயோ ! கையோட
கூட்டி வாங்கோ
தாத்தாட்ட!!..

க.குமரன்
யேர்மனி