சந்தம் சிந்தும்
வாரம் 188
எரிபொருள்
சொகுசுக்கு வந்த உடம்பு
சொகுசாக போகும் இங்கு
வசதிகள் பார்த்தவங்க
வரவும் போகவும்
மிதிப்பாங்களா மிதிவண்டியை
இனி
நித்தம் ஓடும் வாகனம
நிலையாக நிற்குது
பார்த்தால் வரிசை
பல தூரம் போகுது!
இராத்திரி கண் விழிப்பு
சிவராத்திரி ஆகுது இங்கு
யாரும் கண் அசந்தால்
போச்சுது
பத்தாவதாக நின்ற வண்டி
இடையில்
பல வண்டி செருகி
நாற்பதாவதாக. நிற்கும்
காலையில்
கயிறு கட்டி
சீட்டுக்கு மட்டை
போட்டு காக்குறோம்
காத்த நேரம் எல்லாம்
கரையுது
மூன்று லீட்டர் பேற்றோலுக்காக !!!
க.குமரன்
யேர்மனி