வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 94

தீர்வுகள் அற்ற கண்ணீர்

கவி பாடி
காவியம் எழுதி
மாற்றம் வருவது
இல்லையே!

மனித நேயமுடன்
அன்பு சேர்ந்து
பார பச்சம் அற்ற
நிர்வாகம் வந்திடின்

மனிதனே பரமனாவான்
மாநிலமும் சிறக்கும்

உணர்வுகளை மதியாது
ஓடுகின்ற நிலையில்
விடிவுகளை தேடி
வீதியில்அழுது
எந்த இலாபமும்
வருவது இல்லையே!

க.குமரன்
யேர்மனி