சந்தம் சிந்தும்
வாரம் 175
தீயில் எரியும் எம் தீவு
சீதை போட்ட
சாபமடா
சீரழிந்து போகுதடா
சிங்கப்பூராக
இருந்த நாடு
சிவ சமாதி
ஆகுதடா
அனுமான்
அழித்த பூமி
நெருப்பாய் எரியுதுடா
அனைக்க
மனமில்லை
வர்ண மவராசாவுக்கு
போட்ட நெல்லு
புது நாத்தாகுமடா
போட்ட பாவம்
பூகம்பமாக வெடிக்கிறதடா!
காத்த தெய்வம்
கடும் கோபம்
கொள்ளுதடா
கடந்த தப்பை திருத்திடவே
கருனை மகராசா
ராமரும்
திரும்பி வருவாரா
வன வாசம் !!
க.குமரன்
யேர்மனி