வியாழன் கவி
ஆக்கம்88
வேண்டும் வலிமை
பாரினிலே
நின்னையும்
பத்து திங்கள்
காத்திருந்து
பெற்றோமடா
பாவம் எதுவும்
செய்யவில்லை நீ
பாதகமாய்
காலம் செய்தது
குறைகளுக்கும்
தீர்வு
அன்பு
காட்டும்
வழி
கோணல்களை
நேராக்குவோம்
குடிகொள்ளும்
நெஞ்சுரம்
கொண்டு
வாழும்
வரை
வாழ்ந்திடுவோம்
வலிமையை வேண்டுவோமடா !
க.குமரன்
யேர்மனி