சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 170

ஏன் இந்த நியாயம்

ஒரு கொலை
செய்தவனுக்கு
சிறை தண்டனை!

பல கொலை
செய்தவனுக்கு
களம் கண்ட
வீரனா?

ஒரு சேதம்
செய்தவனுக்கு
தெண்டப் பண
வசூளிப்பு

நாசாகாரம்
செய்பவனுக்கு
யுத்தம் என்ற
போர்வையா?

ஒருவனுக்கு ஆயிரம்
சத்திய சோதனை
அடக்கி ஆளும்
அதமத்திற்கு
வாய் பூட்டுக்கள்

வாழ்க. தார்மீகம்!!

க.குமரன்
யேர்மனி