வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் ஆக்கம் 85

அதனிலும் அரிது

முதுமையில்
இளமை
முதிர்வதின்
புதுமை

இதனிலும்
அருமை
நோய்யற்ற
வாழ்க்கை

பேடும
குருடும்
பேதமை
தரினும்

பிணியும்
இடரும்
வயதோடு
வருவது

வராது
வெற்றிடுவதே
அதனிலும்
அரிது

க.குமரன்
யேர்மனி