வியாழன் கவி
ஆக்கம் 83
யுத்தம்
ஆக்கம் ஒன்றுக்கு
ஆகும் நாழிகை
அழிப்பதற்கு ஐந்து
நிமிடங்கள் போதுமே!
ஏற்கும் கோபம்
இடையில் போகும்
இழந்தவை மீட்பது
இயலாத காரியமே!
தெளிந்த சிந்தனை
தேசத்தை ஆளும்
ஆசையின் மோகம்
அவலத்தை தேடிடுமே!
வேல் கொண்டவன்
வேலால் மாண்டான்
மன தாழ்ச்சி பெற்றவன்
உயர்ச்சி பெறுவான் !
க.குமரன்
யேர்மனி