வியாழன் கவிதை

க.குமரன்

உன்னதமே உன்னதமாய்

திருமணம் அற்ற
இல்லறமே
திரு அவன் மறைத்த
திருமதியாய்

தேய் பிறை
வாழ்வில்
மறை பொருள்
அமாவசை
நின் நிலை
ஏளனமாயினும்

உன் நிலை
வாழ்வு
தொடர
உன்னதமே…..
உன்னதமாய் இல்லையே!

மறை பொருள்
வாழ்வில்
மறைந்திடும்
கதி
இது ஒரு
வாழ்வாக
வாழ்ந்திடும்
விதி என நீ

க.குமரன்
யேர்மனி