வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 80

உருமாறும் புதிய கோலங்கள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
கை கோர்க்கும்
கால மிது!

அன்பிலே பேதம்
இன்றி அமைந்திட்
கோல மிது !

என் வாழவு
எனது பக்கம்
நின் நிந்தை
என்ன செய்யும் ?

விதி முறையும்
சாத்திரமும் வேடிக்கை
பார்க்கிறது
இந்த வாழ்வை
வாழ்திடும்
மன பக்குவம்

வருங்காலத்தில் வந்திட்டால்
உருமாறும்புதிய கோலம்
வேப்பிழையாப கைத்தாலும்
வேறு வழி என்ன சொல்வோம்

க.குமரன்
யேர்மனி