சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 28.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 216

நீர்க்குமிழி

குமிழி சொல்லும் பாடம்
குவளையத்தோர் பாரும்

குறுகிய வட்டத்தில்
குதூகல சேர்வை

அலைகழியும் வாழ்வினில்
அத்தனையும் சிறு நிமிடங்களே!

நிலையிலா மாயங்கள்
நிமிடத்தில் மறைவுகள்

உணர்ந்திடாத மனங்களில்
உருவாகும் நினைவுகள்

பார்த்திட அழகுதான்
பயனேதும் அற்று போகிறதே!

நீரில் தவழந்து
நிஜமற்று போகிறதே!

இந்த நீர்க்குமிழிகள்

க.குமரன்
யேர்மனி