வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 122

என்று தீரும்

இதயமற்ற
மனிதர்களிடம்
எதை கேட்டு
என்ன பயன்

தான் தன் சுகம்
என வாழும்
உலகில்
நீதி கேட்டு
பயன் என்ன

முடிவுகளும்
முற்று புள்ளிகளும்
நாம் மனதில்
எடுத்து
விரைந்து போகும்
எதிர்காலத்தில்
மாற்றங்களை
மனதில் கொண்டிடுவோம்

க.குமரன்
யேர்மனி