சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன். 21.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 215

விடியல்

ஆயுதம் ஏந்தி
அவனியில்
கொலைகள்
ஆனது என்னவேனில்!

சீர் கொண்ட
சித்தம் பாரது
சீரழிக்கும் ஆயுத
அனுமதி
யார் தந்தது?

வேர் கொண்டு
அழித்து
வெதும்பிடும் மனங்களுக்கு
போர் கொள்ளும்
ஆயுத அனுமதியை
நிராகரித்தால்!

பார் கொள்ளும்
வன் முறையில்
பாதி தீராதே!
விடியலுதான் வராதோ !

க.குமரன்
யேர்மனி