வியாழன் கவிதை

க.குமரன் 13.4.23

வியாழன் கவி
ஆக்கம் 109

சித்திரை வந்தாலே

வருடம் ஓர் சித்திரை
வந்திடுமே மாதம் நான்கில்
ஏமாத்தி ஏய்து
ஏப்பிரில் பூல் ஆக்கிடுவோமே!

அத்தமோடு சித்திரை
அடுத்த வாழ்வு கொண்டும்
ஆகாது என்பாரே பெரியோர்கள்!

தமிழ் தையும் பிறந்துடும்
தமிழர் பஞ்சாங்கமும்
வந்திடுமே!
மருதடி தேருக்கு
மக்கள் எல்லோரும் செல்வாரே!

சிறப்பு நிரைந்த
சித்திரையே!-ஆனால்
சீர் நிலையற்ற
காலநிலையே!

க.குமரன்
யேர்மனி