சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன் 13.12.22

சந்தம் சிந்தும்
வாரம் 204

வாடகைத் தாய்

உயிருக்குள்
வேறு ஒருவன்
உயிர் சுமந்து
உணர்வுகளில்
சுமை சுமந்து!

மாற்றாள் ஒருத்தி
தாயாகிறாள்
மரண வலி
நீ பொறுத்து!

ஆற்றா துன்பம்
உன் வாழ்வில்
அதற்கு பரிகாரம்
பணம் என்பதால்!

உன் தேவைக்கும்
அவர்கள் தேவைக்கும்
பரிமாற்றம்
சிசு ஒன்றானதே!

கைக்கு கை மாறி
காரியம் தீர்ந்தாலும்

மாற்றான் கைகள்
தழுவுமா?
தீண்டுமா?
சீண்டுமா?

விடை தெரியாத
ஏக்கம். உனக்குள்ளே
என்றேன்றுமே!

க.குமரன்
யேர்மனி