சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 272

பள்ளி பருவம்

மேசையில்
தாளம் போட்டு
மேளம் அடித்து
காட்டினான் கேதீஸ்!

நான் மேளமடிக்க
பழகுகிறேன் என்று
சில பல மாதங்களில்
பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று
போது
ஒரு பெரிய வருடனும்
இன்னுமோருவனுடம்
போனார்கள்
வேலைக்கு போகின்றேன்
மேளமடிக்க
இனி பள்ளிக்கு
வரமாட்டேன்
என்ற கேதீக்கு
எட்டு வயது
நான்காம் வகுப்பு
குறைந்த பள்ளி
பருவமுடன்
நிகழ் கால
வாழ்வை
எப்படி கழிப்பானோ ?

க.குமரன்