சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
புதுமை படைக்கும் புலத்துப் பெண்கள்

படைக்கின்றார் புதுமைகளைப் புலத்துப் பெண்கள்
தடைகளையும் உடைத்துமே தரணி சிறக்க
அடிமை விலங்கொழித்து அறிவை வெழிக்கொணர்ந்து
ஆற்றல் பீறிட அறங்களையும் புரிகின்றார்

விழிநீர் வடித்தாலும் வழிதேடிச் சென்றுமே
தொழில்த் துறைசார்ந்து தனித்திறமை படைக்கின்றார்
புலத்துப் பெண்கள் புதுமைப் பெண்களாய்
உலாவும் வருகின்றார் உரிமையுடன் நின்றுமே

புரிதல் நிறைந்தும் புவியினில் சிறந்தும்
விரிசல் வந்தாலும் வீண்வார்த்தை பேசாமல்
உரிமை கொண்டு அடிமை விலங்குடைத்து
உணர்வுடன் பணியை ஊக்கமுடன் நகர்த்துவார்.

கோசலா ஞானம்.