சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பு

விருப்புக் கொண்டே விவசாயம் செய்தால்
வருகின்ற காலம் வளமாய் இருக்கும்
உருக்குலையா உடலும் உளமும் உறுதியடைய
கருணை கொண்டே காக்கும் உள்ளங்கள்

உலகில் பெருக உண்டி நிரம்பும்
பலமும் கூட பெருவாழ்வு கிட்டும்
துலங்கிடும் வாழ்வு தரணியில் ஓங்கி
நிலமும் வளமாகி நானிலம் செழிக்கும்

செய்யும் தொழிலும் சிறப்பு அடைய
மெய்யை வருத்தி மேதினியில் வாழ்ந்து
விருப்பு டனேயும் வளங்களைப் பெருக்குக…

கோசலா ஞானம்.