சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ யோசி”

நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை
கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை
ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை
நட்புடன் இணைந்து நல்லறம் புரிந்ததை

நின்று நிதானமாய் நினைத்து “ யோசி”
இன்பமுடன் வாழ்வு இனித்திட வாழ்ந்தாலும்
கடந்து வந்த காலத்தை “ யோசி”
மடமையை அகற்றி மாண்பினைக் காத்து
திடமாய் மனதை தினமும் சிந்தித்து
தடம்பதி வாழ்வு துலங்கிடத் தரணியில்
இடம்பிடி சமூக இடரும் அகற்றி
என்றும் நிதானமாய் நல்லதை “ யோசி”

கோசலா ஞானம்.