சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பிறந்தமனை

பிறந்தமனை நினைப்பு பகலிரவு உளத்தில்
இறப்புவரை என்றும் இதயத்தில் இருந்திடும்
பிள்ளைப் பருவமாய் பள்ளி சென்றது
துள்ளி விளையாடி சுறுசுறுப்புக் கண்டது

தினம்தினம் கனவில் தித்திப்பாய் வந்துவிடும்
மனமென்றும் தேடும் மனையின் வாசனை
இனந்தெரியாக் கலக்கம் இதயத்தில் உதிக்க
சினங்கொண்டே வாழ்வைச் சோம்பலுடன் நகர்த்தி

கட்டுக் கடங்கா கற்பனைக் கோட்டை
முட்டி மோதிட மூச்சு பிறந்தமனையில்…

கோசலா ஞானம்.