சந்தம் சிந்தும் சந்திப்பு
“ தீப ஒளி “
இல்லம் சிறக்க உள்ளம் பூரிக்க
மெல்ல ஒளியேற்ற மெருகூட்டும் தீப ஒளி
தொல்லைகள் நீங்கிடத் தந்திடும் தீப ஒளி
அல்லவை நீங்கிட அகன்றிடும் இருளுமே
இயற்கையை வழிபட இங்கிதம் அடைந்திட
செயற்கையை அணைத்து சிறப்பாக வாழ்வினை
முயற்சியுடன் வாழவே முன்னேற்றம் அடையலாம்
உயற்சி பெற்றுமே உன்னதம் பெறலாம்
தீபத்தில் ஒளிரும் திங்களாய்க் கார்த்திகை
தூபத்தில் பெறுமதியாய் துலங்கிடும் மாவீர்ர்
தீப ஒளி ஏற்றித் துதிப்போம் அவர்களை….
கோசலா ஞானம்.