சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பணி

எப்பணி நோக்கிலும் ஏர்ப்பணி சிறப்பே
உண்டி நிரப்பும் உழவர்பணி அன்றோ
தப்பான பணியுமே தரத்தைக் கெடுக்கும்
முப்பாட்டன் சொன்னார் முயன்றால் முடியுமென்று

அல்லும் பகலும் அயராது பணியில்
ஆண்களும் படுகின்ற அவஸ்தை அளவுண்டோ
சொல்ல முடியாத சுமைநிறைந்த வீட்டுப்பணி
பெண்களை சுழலும் பம்பரமாய் உருட்டும்

பணியுமே படுத்தும் பாடுதான் என்னே
பூமியைப் போலவே பொறுமையாய் சுற்றுவோமே…