சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மண்ணில் மாந்தரின் மாண்பு
ஒரு விகற்ப இன்னிசை அளவியல் வெண்பா

மண்ணிலே மாந்தரின் மாண்பு மகத்துவம்
பண்பு நிறைந்த பெருமைகள் சொல்லிடும்
கண்ணினைப் போலவே காத்திடுவார் மாண்பையும்
புண்ணியம் என்றே புகழ்ந்து

புகழ்ந்து வளர்த்திடுவார் பூமியில் பதிக்க
நிகராய்த் தரத்தினில் நீணிலம் காணாப்
புகழும் அறமும் பெரும்பேறாய்ப் பெறவும்
அகத்தில் குளிர்ந்துடும் அன்பு.

அன்பிலே மூழ்கி அகில மதிலேயும்
துன்பம் துரத்த துவண்டாலும் வாழ்விலே
நன்மையும் செய்திடவும் நானிலம் ஓங்கிட
நன்றேயும் செய்திடுவார் நிதம்.