சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் கவி
பொறுமையில் பூமாதேவி

பெண்ணவள் பெற்றிட்ட பேறு பூமியில்
பேதையவள் பொறுமையில் பூமா தேவி
கண்ணெனக் காத்திட்டால் கலங்காது வாழ்வாள் – ஆனால்
கசக்கிப் பிழிந்திடுவார் கண்விழி நீர்வடிய

பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத பெண்கள்
பலருண்டு இந்தப் புவியில்
மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
முழுப்பொ றுப்பையும் முந்தா னையிலே

முடிந்துமே முழித்திடுவாள் முழியும் பிதுங்கிட
மகவுப் பேற்றிலே மறுபிறப்புக் காண்பவள்
படித்துப் பட்டமும் பெற்றிடுவாள் அதனால்
புவிக்கு ஒப்பாக புனைந்தாரோ பெண்ணவளை….