சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாசலைத் தட்டுகிறது வசந்தம்

பறக்கும் புள்ளினங்கள் பரவசம் கொள்ள
பகலவன் விழிக்க பனிமூட்டம் கலைய
திறக்கிறது வாசலைத் தித்திப்பாய் வசந்தம்
துளிர்கள் மெல்லத் தளிர்விடப் பசுமை

இயற்கையின் பரிமாற்றம் இனிமையைத் தந்திட
எடுத்தாள முடியாது இருண்டபுகை மறைக்க
செயற்கைச் சாதனம் செயல்திறன் பெருக
சுகம்தரும் வசந்தம் சுமையென விழிக்க

காலங்கள் நகருது கலியுகத் திலின்று
கதிகலங்கி மாந்தர் கழித்திடும் வசந்தம்…..