சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொங்கல் வருகுது

பொங்கல் வருகுது பொங்கல் வருகுது
பூரிப்பில் மனங்கள் புன்னகை சொரியுது
பொங்கி மகிழ புலத்திலும் ஆரவாரம்
புதுப்பானை வாங்கவும் புத்தாடை உடுத்தவும்

அங்காடி தேடியே அலைவார் எம்தமிழர்
அல்லல் ஒருபுற மதையொதுக்கி மறுபுறம்
பொங்கும் பொங்கலில் பூரிப் படைந்திடுவர்
பகலவன் வரவும் பட்டுத் தெறிக்க
பகலும் வந்துமே பனியும் அகலுமே

பங்கம் வாராது பகலவனை வேண்டி
பொங்கியும் வைத்து பாவும் பாடிடுவர்….