சந்தம் சிந்தும் சந்திப்பு
இயற்கை
மழையும் பொழிய மண்ணும் குளிர
விளையும் பயிரில் விளைச்சல் பெருகும்
உழைக்கும் மக்கள் உயர்வும் காண
முளைக்கும் விதையும் மூப்புடன் முளைக்கும்
இயற்கை தந்த எழிலான பசுமையை
செயற்கை கொண்டு சிதைக்காது நாமும்
முயற்சி தருகின்ற முன்னேற்றப் பாதையில்
உயற்சி கண்டும் உள்ளம் குளிருவோமே
பற்றுக் கொண்டும் பவனியைக் காத்து
சுற்றும் பூமியில் சுகத்துடன் வாழ்வோமே…
கோசலா ஞானம்.