சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாட்டி

வாட்டம் இல்லாத வலிமை ஓங்கிநிற்க
வீட்டுக் கடமைகளை வீச்சுடன் செய்திடுவார்
பாட்டியின் செயல்கள் பக்குவம் சொல்லிடும்

பள்ளிப் படிப்பைவிட பாட்டியின் கதைகள்
புள்ளியிட்டும் போட்டி பெறவும் வைத்திடுமே
பள்ளி முடிந்ததும் பூட்டியோட தனக
சுள்ளித் தடியால் துரத்திடுவார் பாட்டியன்றோ

பாட்டியென்றும் பூட்டியென்றும் பலவுறவு இருந்ததுண்டு – இன்று
வாட்டுது தனிமை வதைக்குது மனதை
கூட்டு வாழ்வும் குதூகலமும் குன்றி
பாட்டியையும் காணோம் பூட்டியையும் காணோம்…

கோசலா ஞானம்.