சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மண்

எங்கள் மண்ணும் அம்பிகை அருளால்
பொங்கும் பெருமை புகழாய்ச் சொரியுது
சங்கத் தமிழுடன் சரித்திரம் சொல்லுது
புங்கை மண்ணும் புகழாரம் சூடுது

ஐந்து கோபுரம் அழகாய்த் தோன்றி
நொந்த மாக்களின் நோயைத் தீர்த்திட
வெந்த புண்ணில் வேப்பிலை தடவ
வந்துதித்தா அம்பிகை வரமாய் எமக்கு

பக்தர்கள் புடைசூழ பவனிவந்தும் அம்பிகையும்
மக்களின் துயர்துடைத்து மகிழ்வுனையும் தந்திடுவா
பக்கத் துணையிருந்து பட்டதுயர் போக்கிடுவா
பக்தியுடன் வணங்கிடவே பரிதியைப்போல் ஒளிதருவா….

கோசலா ஞானம்.