சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

ஆற்றல்

ஆற்றல் வெளிப்பட அழகுடன் செயல்ப்பட
ஊற்றாய் ஊக்கம் ஊறிடும் மனதில்
தோற்றும் இன்பம் துலங்கிடும் வாழ்வில்
சாற்றும் தேர்வில் சகலதும் வெற்றியே!

துலங்கிடத் தனதாற்றல் தரத்துடன் மிளிர
குலத்தைக் காக்க கணமும் ஓயாது
வலம்வரும் உலகில் வளத்தைப் பெருக்கி
புலத்தில் எம்மவர் புதுமைகள் படைக்கிறார்

ஊக்கம் தந்திடும் உயர்வே வாழ்வில்
தாக்குப் பிடித்துத் தரத்தை உயர்த்துமே..

கோசலா ஞானம்.