சந்தம் சிந்தும் கவிதை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தவிப்பு

தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு
மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு
எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு
கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு

உறவுகளைத் தேடியுமே ஊரூராய் அலைகின்றார்
சிறகொடிந்த பறவைகளாய் சினத்துடன் தவித்து
மறக்கவும் முடியாமல் மரணித்தே போகின்றார்
உறக்கம் கலைந்தும் உளமும் தவிப்பில்

மொத்தத்தில் எல்லாமே தவிப்பு தவிப்பு
சித்தங் கலங்காது சிந்தனை சிதறாது
எத்தனை இடர்கள் எமைவந்து மோதினாலும்
அத்துனைத் தவிப்பும் அகன்றிட வாழ்வோமே…

கோசலா ஞானம்.