சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

நீர்க்குமிழி
———-
கடலில் ஏற்படும் நீர்குமிழி
கணப்பொழுதில் மறைந்து விடும்
அடிக்கடி தோன்றினாலும் அதிகம்
அமிழ்ந்தே விடும் விரைவில்
சிலநினைவுகள் கூட நீர்க்குமிழி
சிலரது வாழ்க்கையும் நீர்க்குமிழி
சில எண்ணங்களும் நீர்க்குமிழி
பல வர்ணங்களும் வானவில்லே
மனிதன் நினைப்பது வாழ்க்கை
நிலைக்குமென்று
மனிதன் பிறக்கும்போதே இறப்பு
நிச்சயிக்கப் படுகிறது
எப்போது என்றுதான் யாருக்கும்
தெரிவதில்லை
அதற்கிடையில் எத்தனை ஆட்டம் பாட்டம்
இத்தனையும் நீர்க்குமிழிதானே
வாழ்க்கை வசந்த மென்று
நினைந்திருக்கையில்
வசந்தமும் வலியாக்கி
வருத்திய போது
வசந்த வாழ்க்கை
பாதியில் முடிந்தபோது
வாழ்க்கையும் நீர்க்குமிழி
எனப் புரிய வைத்தது
கெங்காஸ்ரான்லி